தமிழக அரசை கண்டித்து, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர்: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் தொடர் வேலைநிறுத்தத்தில ஈடுப்ட்டு வருகின்றனர்.
சிறப்பு கால முறை ஊழியர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம், அங்கன்வாடி ஊழியர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு அரசு விடுதி சமையலர்களுக்கு இணையான ஊதியம், சட்டப்பூர்மான ஓய்வூதியம், ஓய்வூதியம் பணிக்கொடை, 10 ஆண்டுகள் பணிமுடித்தவர்களுக்கு மேற்பார்வையாளராக பதவி உயர்வு, சம வேலைக்கு சமஊதியம், ரத்து செய்யப்பட்ட சனிக்கிழமை விடுமுறை மீண்டும் வழங்க வேண்டும், மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியை 10 லட்சமாக உயர்த்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு ஏற்க வேண்டும், ஓய்வு பெறும் போது ஒட்டு மொத்த தொகை ரூ.2 லட்சத்தை வழங்கவும், வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி உயர்த்தி வழங்க வேண்டும், அவுட் சோர்ஸ், ஒப்பந்த நியமனம், தொகுப்பூதிய முறைகளை கைவிட வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக படிகள் வழங்க வேண்டும், கோடை விடுமுறை பள்ளிகளுக்கு வழங்குவது போன்று அங்கன்வாடிகளுக்கும் விடுமறை அளிக்க வேண்டும், கடந்த 2016-ஜன.1 அன்று முதல் அமுலாக்கப்பட்ட ஊதிய மாற்றத்தில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு மறுக்ககப்பட்டுள்ள ஓராண்டு நிலுவைத் தொகையினை உடனே ரொக்கமாக வழங்கிட வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அங்வாடி ஊழியர்கள், மற்றும் உதவியாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராடத்தில் ஈடுபட்டதுடன் பெரம்பலூர் பாலக்கரை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அங்கன்வாடி சத்துணவு சங்கத்தின் தலைவர் தையல்நாயகி தலைமை வகித்தார். சத்துணவு ஊழியர் சங்க தலைவர் பெரியசாமி, சி.ஐ.டி.யூ பொறுப்பாளர் ஆர்.அழகர்சாமி,
அங்கன்வாடி சத்துணவு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மணிமேகலை, சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் செல்லப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சத்துணவு பணியாளர்கள்
இதே போன்று அரசு ஊழியர்கள் சங்கம், பொதுத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட சங்கத்தினர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.