O.P.S. And EPS leave both and the volunteers request to elect a new leadership for the AIADMK!
அஇஅதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் கடுமையான உழைப்பாலும், திறமையாலும் கட்டமைக்கப்ட்ட இந்தியாவின் வலுவான இயக்கம்.
கோடிக்கணக்கான தொண்டர்கள் நிறைந்த கட்சி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திறமையால், மோடியா லேடியா என தேசிய கட்சியான பாஜகவை அதிரவைத்த கம்பீரம் மிக்க கட்சி.
1972 தொடங்கப்பட்ட இந்த இயக்கம், பல்வேறு தேர்தலில் பல வெற்றி தோல்விகளை கண்டது. அதோடு, குடும்பக்கட்சியை எதிர்த்து, தமிழகத்தில் எந்தவொரு சாதாரண தொண்டனும், பெரிய அடைய முடியும் என்பதற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதாரணம். சாதாரண தொண்டனாக ஆரம்பித்து முதலமைச்சர் ஆனார்.
ஜனநாயகத்திற்கும், தமிழ்நாடு அரசியலுக்கும் சிறந்த எதிர்கட்சி தேவை என்றால் அது அதிமுக-வாகத்தான் இருக்க முடியும். இந்த கட்சி அழிந்து விடக்கூடாது தொண்டர்கள் எதிர்ப்பார்ப்பு மட்டும் அல்ல, பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும், நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமையா, இரட்டைத் தலைமையா என்ற பிரச்சனையில் கட்சி தொண்டர்கள் இரண்டாக பிரிந்து வருகிறார்கள். முதலமைச்சராக பதவி வகித்து அனுபவித்து பார்த்து விட்ட ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவரையும் விடுவித்து விட்டு, அக்கட்சிக்கு உழைத்த ஒருவரை புதிதாக ஜனநாயக முறைப்படி புதிய தலைமையை தேர்வு செய்ய வேண்டும் என அதிமுகவின் தொண்டர்களுடன், வாக்களர்களும் எதிர்பார்க்கின்றனர்.
அதிமுக கட்சி நிர்வாகிகள், புதிய தலைமையாக அக்கட்சியை சேர்ந்த ஒருவரை புதிதாக தேர்வு செய்து கட்சியை வலுப்படுத்துவதோடு , அஇஅதிமுக ஒரு மிகச் சிறந்த ஜனநாயக கட்சியாகவும், திமுக விற்கு சிறந்த எதிர்க்கட்சியும் என நிரூபித்து தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையாக இருந்தாலும், தமிழ்நாட்டின் மக்களின் நலனை நிர்ணயிக்கும் கட்சி என்பதாலும், தாத்தா மக(ன்)ள், பேரன் என குடும்பக் கட்சிகள் போல அதிமுகவில் பதவிகள் யாருக்கும் நிரந்தரமில்லை என்பதை நிகழ்த்தி காட்ட வேண்டும் என தொண்டர்கள், பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெ.ஜெயலலிதா ஆட்சியிலும், கட்சியிலும் இருக்கும் போது மேடைகளில் இந்த இயக்கம்….. இந்த இயக்கம் என முழங்கினார்களே.. அது என்னவென்று விரைவில் தெரிந்துவிடும். பதவி பற்றா, கொள்கை பற்றா என்பது காலம் விரைவில் சொல்லப் போகிறது. தமிழக மக்கள் அதிமுகவின் ஒவ்வொரு அசைவையும், கண்காணித்து வருகின்றனர்.
மீண்டும் பீனிக்ஸ் பறவையாக அதிமுக மீண்டும் எழுமா, அல்லது தொண்டர்களால் பிரிந்து பலமிழந்து போய்விடுமா என ஆளும்கட்சி உள்பட மத்திய மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்பார்க்கின்றனர்.