Offered to drive her grandmother sent for treatment in the accident Villupuram collector Subramanian

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் இன்று மேல்மலையனூர் ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு விழுப்புரம் நோக்கி தனது காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது செஞ்சி முக்கிய சாலையல் அசோகாபுரி கிராமம் அருகே முன்னே சென்று கொண்டு இருந்த மினி டெம்போ ஒன்று கொட்டையம்பூண்டி கிராமத்தை சேர்ந்த அழகம்மாள் (வயது 80) என்பவர் மீது மோதிய விபத்துக்குள்ளானது.

பின் தொடர்ந்து வந்த ஆட்சியரின் கார் விபத்து ஏற்படாதவாறு ஓட்டுனர் அருண் சாமாத்தியமாக ஓரமாக காரை நிறுத்தினார்.

விபத்தில் சிக்கிய மூதாட்டியை வலியால் துடித்தார். இதனை கண்ட மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணி தனது காரில் அழைத்து சென்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க உத்தரவிட்டார். பின்னர், வந்த பிஆர்ஓ காரில் அவரது அலுவலகத்திற்கு சென்றார்.

மாவட்ட ஆட்சியர் காரில் மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்ட சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் ஆட்சியரின் மனிதாபிமானத்திற்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!