Officer when escaped on purchased in the millions , the thousand rupees caught while accepting bribe in Perambalur

பெரம்பலூர் துறைமங்கலம் அவ்வையார் நகரை சேர்ந்தவர் சரவணன். இவர் தனது வீட்டின் அருகே பாதுகாப்பற்ற செல்லும் மின்கம்பிகளை நகர்த்தி வைக்க கோரி விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் உதவி செயற்பொறியார் கி.மாணகிக்கம் பல முறை அவரை அலைக்கழித்ததோடு, ஆயிரம் ரூபாய் கையூட்டாக வழங்கினால்தான் மாற்றி அமைக்க முடியும் என திட்ட வட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆயிரம் ரூபாய் கொடுக்க லஞ்சம் கொடுக்க மறுத்த லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார். புகாரை ஏற்ற அதிகாரிகள் ரசயானம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர். அதை லஞ்சமாக உதவி செயற்பொறியாளர் கி.மாணிக்கம் பெற்ற போது கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள் மாணிக்கத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான உதவி செயற்பொறியாளர் மாணிக்கம், வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்துக்களை குவித்துள்ளதும், பெரம்பலூர் மதனகோபாலபுரத்தில், ஒன்றரை கோடி மதிப்பில் ஒரு வீடும், திருச்சி -ஸ்ரீரங்கத்தில் ஒரு வீடும் உள்ளது. மேலும், பணம், தங்க நகைகள், மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர்களிடம், பிளாட்டுகளில் செல்லும் மின்கம்பத்தை மாற்றியமைக்க லஞ்சமாக பிளாட்டுகள் பெற்றதும், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள், வீடுகளுக்கு மின்இணைப்பு பெற கட்டாயப்படுத்தி பணம் பெற்றதும் தெரிய வந்துள்ளது. மேலும், லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிய போது சிக்காத அதிகாரி ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று பிடிப்பட்டு, சிக்கி உள்ள சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாணிக்கத்திற்கு சொந்தமான 3 வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!