Official Advisory Meeting with Authorized Political Party Persons on Local Elections

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான தேர்தல் அறிவிக்கை டிச.9 அன்று வெளியிடப்பட்டு, வேட்பு மனு தாக்கல் அன்றைய தினம் முதல் நடைபெற்று வருகின்றது.

அதனைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தலை அமைதியாகவும், சுமூகமாவும் நடத்திட மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்ளுடன் நேற்று மாவட்ட ஆட்சியரின் கூட்டரங்கில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா பேசியதாவது:

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை அறிவித்ததை தொடர்ந்து தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. மேலும் நடப்பு சட்டமன்ற தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும் அப்பகுதிக்கு தொடர்புடைய கிராம ஊராட்சி வார்டு வாக்களளர் பட்டியலில் இடம்பெற தகுதியுடையவராவார். எனவே, நடைபெறவுள்ள எந்த தேர்தலிலும் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டாலும் அத்தேர்தலுக்கு தொடர்புடைய ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் சம்மந்தப்பட்ட நபரின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் ஊராட்சிகள் தேர்தல் குறித்த சட்டங்கள், விதிமுறைகள், செயல்கள், நடைமுறைகள் மற்றும் அறிவுரைகள் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும், எந்த ஊராட்சிக்கு, வார்டுக்கு போட்டியிடுகின்றீர்களோ அந்த ஊராட்சியில், வார்டின் முழுமையான வாக்காளர் பட்டியலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களிடமிருந்து பெற்று உடன் வைத்திருக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வதற்கு முன்பாகவே அப்பட்டியலில் தங்களது பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்வது அவசியமாகும். வேட்பு மனு பரிசீலனை நாளன்று, வேட்பு மனு தாக்கல் செய்த அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் மற்றும் நேரத்தில் வேட்பு மனு பரசீலனையில் கலந்து கொள்ள வேண்டும். பரசீலனை முடிந்த பின், தங்களது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளபட்டதா என்பதைனையும், செல்லதக்க வேட்பு மனு பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் தேர்தல் நாளன்று தேர்தல் முகவரை நியமித்துக்கொள்ள உரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்தல் பரப்புரையின் போது வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்களையோ, உறுதிமொழிகளையோ, முறையீடுகளோ, அச்சுறுத்தல்களோ இன்றி வாக்கு சேகரிப்பு பணிகளில் வேட்பாளர்கள் ஈடுபட வேண்டும். ஒருவரை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தவிர்க்கவோ அல்லது போட்டியிட செய்யவோ முறையற்ற வழிகளை பின்பற்ற கூடாது,

வாக்காளர் எவரையும் வாக்களிக் செய்வதற்காக அல்லது வாக்களிப்பதிலிருந்து தடுப்பதற்காக எந்த ஒரு முறையற்ற செயலையும் செய்ய கூடாது. வாக்காளர்களின் மத, இன, சாதி மற்றும் மொழி உணர்வுகளை தூண்டி வாக்களிக்க செய்யவோ அல்லது வாக்களிப்பதை தடுக்கவோ முயல கூடாது. ஒவ்வொரு தேர்தலுக்கும் நிர்ணயிக்கபட்ட தேர்தல் செலவினங்களுக்கு மேல் செலவு செய்யக்கூடாது.

தேர்தலுக்கு செலவழிக்கப்படும் தொகைகளுக்கு முறைப்படி கணக்குகள் பராமரித்து, கணக்குகளின் நகலை தேர்தல் முடிவு அறிவுப்பு செய்யப்பட்டதலிருந்து 30 நாட்களுக்குள் உரிய அலுவலருக்கு குறிப்பிட்ட படிவத்தில் அனுப்ப வேண்டும். தவறும் பட்சத்தில் அடுத்த தேர்தலில் போட்டியிட தகுதியின்மை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வாக்குப்பதிவு பகுதியில், வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக தேர;தல் கூட்டங்கள் எதையும் நடத்தவோ அல்லது அதற்கான ஏற்பாட்டையோ செய்தல் கூடாது. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தோ;தல் நடத்தை விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்,

மேலும், உரிய அனுமதிபெற்ற பின்னரே ஊர்வலங்கள் போன்றவை நடத்த வேண்டும், மேலும் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அல்லது பிற வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரச்சாரங்கள் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. எந்த ஒரு அரசியல் கட்சியோ அல்லது வேட்பாளரோ அக்கட்சியின் – வேட்பாளரின், தொண்டர்களை எந்த ஒரு தனி நபருடைய இடம், கட்டிடம் சுற்றுசுவர் போன்றவற்றை தொடர்புடைய உரிமையாளரின் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் பதாகைகள் வைக்கவும், அறிவிப்புகள் ஒட்டவும், வாசகங்கள் எழுதவும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது. மேலும் இத்தேர்தலை நியாயமாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்து தரப்பனரும் ஒத்துழைக்க வேண்டும், என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் அரசியல் கட்சிகள் பிரமுகர்களுக்கு வேட்பாளர் கையேடு, மாதிரி நடத்தை விதிகள் குறித்த கையேடு ஆகியன வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன், திட்ட இயக்குநர் தெய்வநாயகி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!