தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தேர;தல் ஆணையத்தின் மூலமாக பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மாவட்டதிலுள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி தேர்தலில் தகுதியுடைய அனைவரும் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இன்று,
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு ஜெயின் ஜோசப், ரோவர; மற்றும் கௌதம புத்தர; உள்ளிட்ட நிறுவனங்களின் முதியோர; இல்லங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி நேரடியாக சென்று,
அங்குள்ள முதியோர;களிடம் மே 16 அன்று நடைபெற உள்ள சட்டமன்ற தேர;தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினார். பின்னர், அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தும் உறுதிமொழியினை மாவட்ட வருவாய் அலுவலர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தாவது:
இத்தகைய முதியோர் இல்லங்களில் வாழும் அனைத்து முதியவர்களின் பெயர்களும், வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும்.
அப்படி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அவர்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் தேர்தல் நடைபெறும் அன்று வயதான முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க ஏதுவாக அவர்களுக்கு தேவையான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும், என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கௌதம புத்தர் முதியோர் இல்லத்தில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமாக வாக்களிக்கும் முறை அங்குள்ள முதியோர்களுக்கு செயல்முறை விளக்கம் மண்டல அலுவலர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் வட்டாட்சியர் சிவா, முதியோர் இல்ல கண்கானிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.