Old woman set on fire near Perambalur for not taking care of her children!
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்டபட்ட அரணாரை கிராமம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி ராமாயி (75),இவருக்கு நீலம்மாள் (55), மலர்ஜோதி (53), மகேந்திரன் (50) என 3 குழந்தைகள் உள்ளனர். ராமயாயி தனியாக வசித்து வந்தார். கணவர் 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். வயது முதிர்வால், சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டும்,இடுப்பு எலும்பு தேய்மானம், நோயாலும், ஏற்பட்டு நடக்க முடியாமல் இருந்து வந்தார்.
தன் பிள்ளைகளும். தன்னை பாராமரிக்காமல் விட்டதால், கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், இன்று அதிகாலை சுமார் 4.30 மணி அளவில் தன் வீட்டின் முன்பு மண்ணெண்ணெயை தன் உடல் முழுவதும் ஊற்றிக் கொண்ட அவர், தனக்கு தானே தீ வைத்து கொண்டு அலறி துடிதுடித்து இறந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த ராமாயின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி தீக்குளித்த சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.