On Ambedkar’s birthday, rally in Perambalur: VCK district executive committee meeting decided!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பெரம்பலூர் “மாவட்ட செயற்குழு கூட்டம்” பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சி.தமிழ்மாணிக்கம் விசிக தலைமையில் பெரம்பலூர் அரசு ஓய்வு பெற்ற அலுவலகத்தில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தஞ்சை வழக்கறிஞர் ச.விவேகானந்தன் மேலிடப் பொறுப்பாளர், மாநில செயலாளர் (வி.தொ.வி.இ) வீர.செங்கோலன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்..

மாவட்ட பொருளாளர் அ.கலையரசன், மாவட்ட செய்தித் தொடர்பாளர்கள், வழக்கறிஞர் இரா.ஸ்டாலின், மு.உதயகுமார், சட்டமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ம.ச.க.ரத்தினவேல்
முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் சா.மன்னர்மன்னன், சு.ராசித்அலி, அ.பிரேம்குமார், ஒன்றிய செயலாளர்கள்: சி.பாஸ்கர் பெரம்பலூர் கிழக்கு, இரா.பிச்சைப்பிள்ளை பெரம்பலூர் கிழக்கு, இரா.வரதராஜன் வேப்பூர் வடக்கு ஆ.நந்தன் வேப்பூர் தெற்கு, எ.வெற்றியழகன் வேப்பந்தட்டை மேற்கு, மா.இடிமுழக்கம் வேப்பந்தட்டை கிழக்கு உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு கட்சியில் இருந்து விலகி விசி கட்சியில் இணைந்தனர். நகர்மன்ற உறுப்பினர் தங்க.சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

கூட்டத்தில், வரும் ஏப்ரல் 14-ந்தேதி புரட்சியாளர் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் அன்று “சனாதனத்தை ஒழிப்போம்” “சனநாயகத்தை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் மாபெரும் நடை பேரணி பெரம்பலூர் சங்கு பேட்டையில் துவங்கி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முடிவு பெற்று மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றும், பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாபெரும் ரத்ததானம் முகாம் நடத்துவது என்றும்,

*வரும் மே-5 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வணிகர் தின மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 200வாகனங்களில் செல்லவேண்டும் என்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.. *தமது கட்சியின் மூத்த முன்னோடியும், முதல் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதான தியாகியும், போராளியுமான அ.பாண்டுரங்கன் மறைவிற்கு இச்செயற்குழு ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும்,

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் உள்ளாட்சி அமைப்புகளின் ஊராட்சிகளில் கட்டிக்கொடுக்கப்படும் தொகுப்பு வீடுகளின் பயனாளிகள் போலியாக தேர்வு செய்யப்பட்டு ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு பயனீட்டு தொகை வழங்கி கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக நீதி விசாரணையை நடத்தி, ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

பெரம்பலூர் நகராட்சி உள்ளிட்ட பேரூராட்சிகளிலும் பணியாற்றி வரும் தற்காலிக தூய்மைபணியாளர்கள் உள்ளிட்ட கடைநிலை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் மாபெரும் மோசடி நடைபெறுகிறது. மேலும், மேற்படி தற்காலிக பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை முழுமையாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்வதுடன், மேற்படி தற்காலிக பணியாளர்களின் சம்பள பிடிப்பு உள்ளிட்ட நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் கொரோனா காலங்களில் உயிரை துச்சமென நினைத்து மக்கள் சேவை ஆற்றிய தூய்மை பணியாளர்களை ஆட்குறைப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தற்காலிக தூய்மை பணியாளர்களை உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், இச்செயற்குழு தமிழக அரசையும், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தையும் கேட்டுக்கொள்கிறது, என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!