On behalf of all the union colleagues in Namakkal

நாமக்கல்லில் அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நலவாரியம் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார்.

தொழிற்சங்க கூட்டமைப்பு துணைத்தலைவர்கள் வேலுபிள்ளை, பெரியசாமி, ராஜாராம் மற்றும் அனைத்து தொழிற்ச்சங்க தலைவர்கள் முன்னிலை வகித்தனர். இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில், நாமக்கல் மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் கடந்த ஜூலை 2015ல் இருந்து ஓய்வூதிய உத்தரவு வழங்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

நலவாரிய அட்டையில் எந்த ஆவணத்தை வைத்து வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ அதன்படி ஓய்வூதிய உத்தரவு வழங்க வேண்டும். அதற்கு மாறாக ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வயது வித்தியாசம் காட்டி ஓய்வூதிய உத்தரவு 60 வயதிற்கு மேலானவர்களுக்கு வழங்கப்படவில்லை.

ஆதார் அட்டையின் வயதுப்படி பதிவு செய்த நலவாரிய அட்டைகளுக்கும் ஓய்வூதியம் வழங்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ இயக்குநர் சான்றளித்துள்ள நிலுவையில் உள்ள கட்டுமான தொழிலாளர்கள் உட்பட ஆயிரம் பேருக்கு ஓய்வூதிய உத்தரவை உடனே வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!