On behalf of Allmighty Vidyalaya Public School in Perambalur, relief aid for victims of Gaja storm
கஜா புயலால் தமிழகத்தில் புதுக்கோட்டை தஞ்சாவூர் நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் ஸ்கூல் (சிபிஎஸ்இ) மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் அரிசி, மளிகை பொருட்கள், எண்ணெய், பிஸ்கட், பால்பவுடர் மற்றும் மெழுகுவர்த்தி போர்வை உள்ளிட்ட 3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை பள்ளிதாளாளர் ஆ.ராம்குமார் தலைமையில் எடுத்துச் செல்லப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா சில்லாத்தூர், தஞ்சாவூர் மாவட்டம், அக்கரைவட்டம், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில் மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர். உசிறுவாச்சூரை சேர்ந்த சிவன்பிரதர்ஸ் குழுவினர் மற்றும் பள்ளியின் பங்குதாரர்கள் மோகனசுந்தரம், முத்துக்குமார் உள்பட கலந்துகொண்டனர்.