On behalf of CM M.K.Stalin’s birthday, Perambalur Union DMK welfare assistance!
பெரம்பலூர் ஒன்றியத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா எழுச்சியாக கொண்டாடப்பட்டது. எசனை கிராமத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் மு.அட்சயகோபால் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ வும், பெரம்பலூர் ஒன்றிய செயலாளருமான ம.ராஜ்குமார் முன்னிலையில் கொடியேற்றி, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேனா, பென்சில்,நோட்டு புத்தகங்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.அண்ணாதுரை, ஒன்றிய நிர்வாகிகள் கலையரசன், ஆதித்யன், முன்னாள் ஊராட்சி செயலாளர் லெட்சுமணன், கிளைச் செயலாளர் மணிவாசகம், குணா, ராஜா, கலைச்செல்வன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராம்தேவ், கட்சி முன்னோடிகள் எஸ்.ரெங்கர், சசுக்கு சுப்ரமணியன், கலியபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல் விளாமுத்தூர், கவுல்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கொடியேற்றி, பள்ளி மாணவிகளுக்கு நோட்டு,பேனா, பென்சில் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
பின்னர், மதியம், பெரம்பலூர் முதியோர் இல்லங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பெரம்பலூர் நகராட்சி கவுன்சிலர் துரை.காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளம்பரம்: