On behalf of Perambalur District Legal Affairs Committee, a legal awareness camp for the differently abled!
பெரம்பலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைகுழு சார்பில் துறைமங்கலத்தில் உள்ள அன்பகம் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளியில்
சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியும் ஆகிய சந்திர சேகர் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு குறித்து தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் அவர்களுடன் கலந்துரையாடல் செய்து அவர்களின் குறை, நிறைகளை கேட்டறிந்தார். வேறு ஏதேனும் குறைகள் இருப்பின் சட்ட உதவிமையத்தை நாடலாம் என்று அறிவுறுத்தினார்.
இதில் சட்ட உதவி பாதுகாப்பு வழக்கறிஞர் திருஞானம் கலந்து கொண்டு மாற்று திறனாளிகளுக்கான விழிப்புணர்வு குறித்து பேசினார்.
அன்பகம் சிறப்பு பள்ளியின் பொறுப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட மாற்று திறனாளி மாணவர்கள் 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.