On behalf of the Aram Makkal Nala Sangam (Charity People’s Welfare Association) to continue the education of the Nerikuravaru community students who are continuing their college studies!

பெரம்பலூரில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ பயின்ற இரு கல்லூரி மாணவிகள் மீண்டும் கல்வியை தொடர அறம் மக்கள் நலச் சங்கத்தின் நிர்வாகிகள் சார்பில் கல்விக் கட்டணம் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், மலையப்ப நகரைச் சேர்ந்த மாணவிகள் பாரதி, செல்வி இருவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வருகின்றனர். பாரதி முதலாம் ஆண்டும், செல்வி 2ம் ஆண்டும் பயின்று வந்தனர். அவர்களுக்கான கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் கல்லூரி நிர்வாகம் கல்வி தொடர அனுமதிக்கவில்லை, தேர்வுக் கூட நுழைவுச்சீட்டும் பெற முடியவில்லை. இதனால், வேதனை அடைந்த இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு நரிக்குறவர் சமுதாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆர்.சிவக்குமார், அறம் மக்கள் நலச் சங்கத்தின் மாநில துணைச் செயலளார் எஸ். சாவித்திரி மற்றும் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் டி.ரவிச்சந்திரன் ஆகியோர் நாடினார். பரிசீலனை செய்த நிர்வாகிகள் இருவரும், இரு மாணவிகளின் கல்விக் கட்டணம் ரூ. 48 ஆயிரத்தை ஏற்று, தலா 24 ஆயிரம் ரூபாயை ரொக்கமாக வழங்க முடிவு செய்தனர். அதன்படி திருச்சியில் நடந்த நிகழச்சி ஒன்றில், அறம் மக்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சு.ராஜாவிடம் கொடுத்து அம்மாணவிகளுக்கு வழங்கச் செய்தனர். பெற்றுக் கொண்ட மாணவிகள் தற்போது கல்லூரி படிப்பை தொடர்ந்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!