On behalf of the Perambalur District Legal Services Commission, the judges issued welfare identity cards to the construction workers.


பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பில் இணைய வழி காணொலி காட்சி மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. அதில், பதிவு பெற்ற அமைப்பு சாரா பத்து கட்டுமான தொழிலாளர்களுக்கு தொழிலாளர் அடையாள அட்டையை வழங்கிய அவர், நலிவடைந்த தொழிலாளர்களுக்கு சட்ட உதவியும், இதுவரை பதிவு செய்யாத தொழிலாளர்கள் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினை அணுகினால் அவர்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் இலவசமாக பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை பெற்றுத் தரப்படும் என்று கூறினார்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா முன்னிலை வகித்தார். பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முகமது யூசுப் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில், பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சிறந்த தரத்திலான கல்வியினை நன்மதிப்புள்ள தனியார் பள்ளிகள் மூலம் இலவசமாக கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும், கட்டுமான பணியிடங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் தொழிலாளர்களுக்கு ரூ. 2000/- மதிப்புள்ள பாதுகாப்பு (தலைக்கவசம், கையுரை, கண்கண்ணாடி, காலணி, பாதுகாப்பு மேலாடை) வழங்கப்பட்டுள்ளது என்றும், கொரோனா வைரஸ் நிதியாக பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தலா ரூ. 2000/- வீதம் 15577 நபர்களுக்கு மொத்தம் ரூ.3,11,54,000/- பணப்பயனும், அரிசி 15 கிலோ, பருப்பு 1 கிலோ மற்றும் சமையல் எண்ணெய் -1 கிலோ வழங்கப்பட்டுளதாகவும், பொங்கள் பண்டிகைக்காக 15700 நபர்களுக்கு அரிசி, பாசிப்பருப்பு, நெய், சமையல் எண்ணெய், வெல்லம், ஏலக்காய், முந்திரி, திராட்சை ஆகிய பொருட்கள் இலவசமாக வழங்ப்பட்டுள்ளது மேலும் வேட்டி, துண்டு மற்றும் சேலை வழங்கப்பட உள்ளது என்றும், தொழிற்சாலை அலுவலகத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்து பயன் அடையவும் மேலும் கட்டுமானத் துறையில் அனுபவம் இருந்தும் சான்றிதழற்ற தொழிலாளர்களுக்கு ரூ. 500 ஊக்கத்தொகையுடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படவுள்ளது என்றும், இதனை தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ளவும், அமைப்பு சாரா தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பல்வேறு முகாம்களை நடத்தி சட்ட விழிப்புணர்வும், சட்ட உதவியும் செய்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் வினோதா நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!