On behalf of the Perambalur district, the people of Chennai affected by the storm will receive about Relief goods worth Rs. half a crore; Collector Information!

பெரம்பலூர் மாவட்டத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தன்னார்வலர்கள் தனியார் அமைப்புகள், தொழிலதிபர்கள் என பல்வேறு அமைப்பினரும் அரிசி, குடிநீர், மெழுகுவர்த்தி, போர்வைகள், மருந்து பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றார்கள்.

முதல் கட்டமாக சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் சென்னை மாவட்டம் புழுதிவாக்கம் பகுதிக்கு 06.12.2023 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2ம் கட்டமாக 07.12.2023 அன்று தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழகத்தின் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டிலும், ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் பல்வேறு தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சுமார் ரூ.13 லட்சம் மதிப்பீட்டிலும் நிவாரண பொருட்கள் 03 வண்டிகளில் சென்னை மாவட்டம் திருவெற்றியூர் (பகுதி 14)க்கு அனுப்பப்பட்டது.

இன்று மூன்றாம் கட்டமாக மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் ரூ.11 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் மற்றும் துணிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும், பல்வேறு தன்னார்வலர்கள், தனியார் அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் ரூ.4.67 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் 02 வண்டிகளில் சென்னை மாவட்டம் பள்ளிக்கரணை (பகுதி 01)க்கு அனுப்பப்பட்டது.

கடந்த மூன்று நாட்களில் ரூ.48.66 லட்சம் மதிப்பிலான பல்வேறு நிவாரண பொருட்கள் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்பும் தொண்டுள்ளம் படைத்தோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்தில் பொருட்களை வழங்கி உதவலாம் என்றும், இதுவரை நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய ஒவ்வொருவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!