On June 12, Mettur will open to the Chief Secretary of PWD PR. Pandian request

சென்னை: தமிழக அரசின் பொதுப்பணித் துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அவர்கள் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியனை, சென்னையில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று சந்தித்து பேசினார். பின்னர் சந்திப்பு குறித்து தலைமை செயலக வாயிலில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

காவிரி மேலாண்மை ஆணையம் முழு அதிகாரம் கொண்ட அமைப்பாக அமைத்து, இந் ஆண்டாவது ஜூன் 12ல் மேட்டூர் அனை திறக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசின் நீர்வளத் துறை ஆணையத்தின் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

இந்தாண்டும் குறுவை சாகுபடியும், சம்பா சாகுபடியும் மேற்கொள்ள முடியாவிட்டால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்படும் என்பதை எடுத்துரைத்தேன். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் அரசு செயலர் வழியாக உரிய கடிதம் அளித்துள்ளேன்.

இதற்கு பதில் அளித்த சுப்பிரமணியம் ஆணையம் குறித்து ஜூனில் பருவ காலம் துவங்குவதற்கு முன் அரசிதழில் வெளியிடுவதற்கு மத்திய நீர்வளத் துறை ஆணையம் தொடர் நவடிக்கை எடுத்து வருகிறது, தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த ஹிந்தியில் மொழிபெயர்ப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் அரசிதழில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்த அவர் ஜூன் 12ல் மேட்டூர் அனை திறக்கும் வகையில் ஆணையம் செயல்படும் என உறுதியாக நம்பலாம் என உறுதியளித்தார்.

மேலும் தலைமை செயலகத்திற்கு வருகை தரும் எங்களை காவல்துறை தீவிரவாதிகளை கண்காணிப்பதை போல் அச்சுறுத்துவதை கண்டிக்கிறேன். பத்திரிக்கையாளர் சந்திப்பை தடுத்து, கெடுபிடி நடவடிக்கையில் ஈடுபடுவது விவசாயிகளை அவமானப்படுத்துவதாகும். எனவே இது குறித்து முதல்வர் உரிய விளக்கமளிக்க வேண்டும்.

தூத்துக்குடியில் மணித உரிமைகள் மீறப்படுவதாகவும், குண்டடிபட்டு இறந்தவர்களையும், சிகிச்சை பெறுவர்களை பார்க்க மருத்துவமனைக்கு வரும் உறவினர்களையும் என் கண் முன்னே சுட்டு படுகொலை செய்ததை பார்த்து அதிர்ந்து போனேன். இந்நடவடிக்கையில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்து கொலை வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

சென்னை மண்டல தலைவர் வேளச்சேரி குமார், சென்னை மாவட்ட செயலாளர் வி.கோபிநாத், சென்னை வாழ்காவிரி மக்கள் ஒருங்கினைப்பாளர் அசோக் ஜிலோதா ஆகியோர் உடன் இருந்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!