On the first Sunday of the thai month in honor of Jan Namakkal Sri Anjaneya special abishekam

நாமக்கல், ஜன.21-தை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 1,008 லிட்டர் பாலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நகரில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதேபோல் நேற்று தை முதல் ஞாயிற்றுகிழமையை முன்னிட்டு, காலை 9 மணிக்கு ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து 10 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள்தூள், 1,008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.