On the Independence Day, Lion’s Club is a bicycle contest in Perambalur
பெரம்பலூர் லயன்ஸ் கிளப் சங்கம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது . அதில் அச்சங்கத்தின் பெரம்பலூர் தலைவர் ஜி.என்.பி. ஒஜீர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் லயன்ஸ் கிளப் சார்பில் நடப்பு ஆண்டு மேற்கொள்ளவிருக்கும் திட்ட அறிக்கையை தெரிவித்தார். அதில் கண்தானம், மருத்துவ முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கல்வி உதவிகள், மரக்கன்றுகள் நடுதல், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கைம்பெண்களுக்கு தையல் எந்திரங்கள் வழங்குதல், ஆண்டுக்கு 10 இணையர்களுக்கு திருமணம் செய்து வைத்தல், கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி பயிலரங்கம் அமைத்தல் குருதி கொடை வழங்குல், விழிப்புணர்வு குறும்படம் எடுத்தல், கலை நிகழச்சி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு முக்கியமளித்தல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு லயன்ஸ் கிளப் சார்பில் பெரம்பலூரில் வரும் ஆக.20ம் தேதி மிதிவண்டிப் போட்டி கண்தானம் வழிப்புணர்வுக்காக நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது அச்சங்கத்தின் செயலாளார் ராஜா, பொருளாளர் ஆனந்த், செய்தி தொடர்பாளர் மணிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.