On the order of the Perambalur Collector, the encroachment of the waterways in the village of Elumur have been removed!

பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அதனை மீட்டெடுக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கலெக்டர் கற்பகம் தலைமையில், அனைத்துத் துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

மேலும் உயர் நீதிமன்றம் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் ஆதாரத்தினை பெருக்க வேண்டும் என்ற உத்தரவின்படியும், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், எழுமூர் மேற்கு கிராமத்தில் நீர் வரத்து வாரி 0.45.00 ஹெக்டேர் பரப்பளவில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து வந்ததை நீர்வளத் துறை மற்றும் வருவாய்துறை முன்னிலையில் நீர் தங்கு தடையில்லாமல் செல்வதற்கு நீர் வரத்து வாரி 0.45.00 ஹெக்டேர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு முழுவதுமாக அகற்றப்பட்டது.

இதுபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நீர்வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் தானாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும், என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!