Once again in the liberated areas, the children’s calculation work started by Anganwadi Centers! Collector V. Santha

பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் மூலம் செயல்படும் அங்கன்வாடி மையங்கள் வாயிலாக கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லா வளர் இளம் பெண்களுக்கு இணை உணவு அளித்தல், முன்பருவ கல்வியுடன் மதிய உணவு திட்டம், எடை எடுத்து வளர்ச்சி கண்காணித்தல், நல கல்வி அளித்தல், தடுப்பூசி வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற பொதுமக்கள் தங்கள் குடும்ப விவரங்களை அங்கன்வாடி பணியாளர்களிடம் அளிப்பதன் மூலம், பயனாளி குறித்த விவரங்கள் அங்கன்வாடி மைய பணியாளர்கள் பயன்படுத்தும் CAS (Common Application Software) செயலி மூலம் பதிவேற்றம் செய்யப்படும்.

இக்கணக்கெடுப்பு பணி பெரும்பாலான குடும்பங்களில் முடிவடைந்திருந்தாலும் விடுபட்ட குக்கிராமம் மற்றும் நகர்புறத்தில் உள்ள பல்வேறு குடும்பங்கள் இன்னும் சேர்க்கப்படவேண்டி உள்ளது, இதுகுறித்து கணக்கெடுக்க வரும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு அளித்து தேவைப்படும் தகவல்களை அளிக்கவேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!