Once again, the farmer killed the pesticide Spray in cotton field near Perambalur: Awareness needs of the villagers
பெரம்பலூர் அருகே பூச்சி மருந்து தெளித்த விவசாயி சிகிச்சையின் போது பரிதாபமாக உயிரழந்த சம்பவம் பெரும் பரபபப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் அருகே உள்ள பசும்பலூரை சேர்ந்த விவசாயி அர்ஜுனன் (வயது 54) நேற்று முன்தினம் அவருக்கு சொந்தமான பருத்தி வயலில் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக பூச்சிகொல்லி மருந்தை தெளிப்பான் மூலம் தெளித்து கொண்டிருந்தார். அப்போது திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அங்கிருந்தவர்கள் அர்ஜுனனை பசும்பலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த அவர்இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரண நடத்தி வருகின்றனர்.
பூச்சி மருந்து தெளிக்கும் போது அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பதால் வேளாண் துறை உரிய செயல் விளக்கத்துடன் எந்தெந்த மருந்துகளை எவ்வாறு கையாள வேண்டும் என ஒரு குறும்படம் தயாரித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலக வாகனத்தின் மூலம் ஊர் ஊராக பிராச்சாரம் செய்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் உயிர் பலிகளை தடுக்க முடியும். எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.