Once again, the mysterious gang that broke and damaged the Sami idols at the Siruvachchur temple: the police investigation!

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவிலின் உப கோவிலான பெரியசாமி மலைக்கோவிலில், களி மண்ணால் செய்யப்பட்ட 15க்கும் மேற்ப்பட்ட சாமி சிலைகளை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் கடந்த 06ம் தேதி உடைத்து சேதப்படுத்தினர்.

இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுவாச்சூர் பஸ் ஸ்டாப் அருகே சாலையை ஒட்டி கட்டப்பட்டுள்ள பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஸ்ரீ பெரியாண்டவர் கோவிலில், குதிரை மீது அமர்ந்து இருந்த ஸ்ரீ பெரியாண்டவர் சிலையையும், பேச்சியாயி, எல்லையம்மன், விநாயகர், பெரியநாயகி, ஏழு கன்னிமார்கள் மற்றும் காத்தவராயன் உள்ளிட்ட 13 கற்சிலைகளை கடந்த 08ம் தேதி மர்ம கும்பல் உடைத்து சேதப்படுத்தியது.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவாச்சூர் கிராம மக்கள் சிலை உடைப்பு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், சிலைகள் சேதப்படுத்தப்பட்ட கோவில்களின் அருகே சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த சென்னை கே.கே. நகரை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் என்பவரின் மகன் நாதன் என்கிற நடராஜன் என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்

இதனையடுத்து காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட நாடராஜனிடம், பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு, வழக்குப் பதிந்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி நடராஜனை சிறையிலடைத்தனர். இந்நிலையில் ஏற்கனவே சிலை உடைப்பு சம்பவம் நிகழ்ந்த மலைக்கோவிலில் இருந்த மண் சிலைகளை மர்ம கும்பல் மீண்டும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

இதனை கண்ட பூசாரிகள், மற்றும் பக்தர்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்தை பெரம்பலூர் போலீசார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மிகவும் பிரசித்தி பெற்ற ஆன்மீக கிராமமான சிறுவாச்சூரில் அடுத்தடுத்து, மூன்றாவது முறையாக சாமி சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்திய சம்பவம், அப்பகுதி கிராம மக்கள் உள்ளிட்ட கோவில் பக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!