“One Acre, 2 Cows – A fulfilling life” free training camp organized by Cow Seva in Coimbatore!

ஒரு விவசாயி குடும்பம் “ஒரு ஏக்கர்,இரு நாட்டு மாடு வைத்து நிறைவான வாழ்க்கை”என்ற தலைப்பில் கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள கலங்கல் கப்பல் மதகு தோட்டத்தில் கோ சேவா அமைப்பின் சார்பாக இயற்கை விவசாயப் பயிற்சி வழங்கப்பட்டது. 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இயற்கை உரங்கள் தயாரிப்பு, பூச்சிக் கொல்லி விரட்டி தயாரிப்பு ஆகியவை குறித்து மிக எளிய முறையில் படக்காட்சி மூலம் அகில இந்திய கோ சேவா பயிற்சியாளர் ராகவன் விளக்கமளித்தார்.

தென் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜன், கோவை மாநகர் கோ சேவா பொறுப்பாளர் அசோக் மேத்தா, மனோஜ், சம்பத், லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் இப்பயிற்கு முன்னெடுப்பு செய்திருந்தனர்.

இதை தமிழகம் முழுவதும் எடுத்துச்செல்லவும், அதன் அவசியத்தை Indian council of agriculture research (ICAR), Agro Innovative நிர்வாக இயக்குனர் ஜி.கே.நாகராஜ் வலியுறுத்தி பேசினார். அரசூர் அசோகன், கண்ணம்பாளையம் அருள் பல்வேறு விவசாய பெருமக்களுக்கு எடுத்துச்செல்ல துணை நிற்பதாக உறுதியளித்தனர்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!