One died, Another injured !The two deer who came to search for drinking water near Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர், பாடாலூர், வடகரை, வெண்பாவூர், ரஞ்சன்குடி, கீழப்புலியூர், மேலப்புலியூர், சித்தளி, சின்னாறு, கை.களத்தூர், தொண்டமாந்துறை, செம்மலை, பூலாம்பாடி, உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வனத்துறையின் காப்புகாடுகள் உள்ளது. இவற்றில் மான், மயில், முயல், காட்டுப்பன்றி, நரி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
தற்போது நிலவி வரும் கோடையால் வனத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விலங்குகள் தண்ணீர் தேடி அலைகின்றன. இந்த விலங்குகள் நாய்கள் பொன்ற விலங்குகளாலும், வேட்டைக்காரர்கள் துரத்துவதும் நடைபெறும். விலங்குகள் துரத்தலில் இருந்து உயிர் தப்பிக்க ஓடும். அப்போது எதிர்பாடும் வறண்ட கிணறுகள் அல்லது சாலைகளில் செல்லும் வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகி இறந்து விடும்.
அதே போல் இன்று காலை, பெரம்பலூர் மாவட்டம், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு அருகே உள்ள அயன்பேரையூர் செல்லும் பிரிவு சாலை அருகே சாலையை கடக்க முயன்ற 2 வயது மதிக்கதக்க ஆண் புள்ளி மான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தது.
இது குறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை சுற்றுக் காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர், வனத் துறையினருக்கு தகவல் கொடுக்கபட்டதன் பேரில் உடற்சகூறு ஆய்வு செய்து அடக்கம் செய்யப்பட்டது.
இதே போன்று, அகரம்சீகூர் அருகே உள்ள கருப்பட்டாங்குறிச்சி கிராமத்தில் இன்று காலை தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளி மான் ஒன்றை கண்ட, தெருநாய்கள் அதை சென்று கடித்து குதறிது. இதனை கண்ட பொது மக்கள் தெருநாய்களை அடித்து துரத்தி விட்டு காயங்களுடன் மானை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து புள்ளி மானை கைப்பற்றிய வனத்துறையினர் அதனை சரக்கு ஆட்டோ மூலம் கால்நடை மருத்துவனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதியில் பாதுகாப்பாக சேர்த்தனர்.