One more person dies today due to black fungus attack in Perambalur!
இதுவரை பெரம்பலூர் மாவட்டம் கொரோனா பிடியில் சிக்கி மீண்டும் வரும் வேளையில் அடுத்தாக கருப்பு பூஞ்சை பொது மக்களை மிரட்ட தொடங்கி உள்ளது. நேற்று அந்த நோயால் பொன். கலியபெருமாள் என்பவர் உயிரிழந்த நிலையில் அருமடல் கிராமத்தை சேர்ந்த அய்யாசாமி திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பெண் உள்பட 3 பேர் திருச்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.