One of the fake reporters who tried to extort money from the businessman in Namakkal – one arrested
நாமக்கல் மாவட்டம், நாமக்கல், கணேசபுரத்தைச் சேர்ந்த சின்னு என்பவர் மகன் செந்தில்குமார் (வயது 38) என்பவர் துறையூர் சாலையில், மணி டீல் என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், கடந்த 05.12.2018-ம் தேதி மதியம் 2.00 மணிக்கு தனது நிறுவனத்திற்கு வந்த நபர்கள் ஜூனியர் நியூஸ் ரிப்போர்டர்ஸ் என்று சொல்லிக் கொண்டு பணம் கேட்டு மிரட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து நாமக்கல காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் நாமக்கல்லைச் சேர்ந்த கருப்பையா மகன் சேகர் (வயது 45). என்பவரும் மற்றும் சிலரும் சேர்ந்து கொண்டு ஜூனியர் நியூஸ் ரிப்போர்டர் வார இதழில் எடிட்டர் மற்றும் வெளியிடுவோர் என்று கூறி செந்தில்குமாரிடம் ரூபாய் 50 லட்சம் பணம் கேட்டதாகவும், 50 லட்சம் பணம் கொடுக்கவில்லையெனில் அவரைப்பற்றி மேற்கண்ட வார இதழில் செய்தி வெளியிடுவதாகவும் கூறி ஒரு சுவரொட்டியையும் காண்பித்துள்ளனர்.
இது சம்மந்தமாக நாமக்கல் நகரில் மேற்கண்ட இதழின் நாமக்கல் நிருபர் சேகர் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய கோவையை சேர்ந்த குமார், ராமசுந்தரம் மற்றும் தமிழ்செல்வன் உட்பட மற்ற நபர்களையும் தேடி தனிப்படையினர் கோவை விரைந்துள்ளனர். மேலும், பத்திரிக்கை நிருபர்கள் எனக் கூறிக்கொண்டு போலியாக வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு செல்பவர்களையும், போலி பத்திரிக்கை நிருபர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.