One of the two who smuggled sandalwood near Perambalur was arrested! Another escape!
பெரம்பலூர் மாவட்டம், உடும்பியம் கிராமத்தில் பெரம்பலூர் – சேலம் இரு மாவட்டங்களுக்கு இடையே சோதனை சாவடி உள்ளது. நேற்றிரவு அரும்பாவூர் போலீசார் எஸ்.எஸ்.ஐ கீதா, போலீசார் கார்த்திகேயன் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை சாக்குப்பையில் என்ன இருக்கிறது, காட்ட கூறிய போது, தப்பி செல்ல முயன்றனர். அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில் சாக்குப்பையில் சுமார் ஒன்றரை கிலோ மதிப்புள்ள சந்தன கட்டை இருந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், உடும்பித்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை பின்புறம் இருந்த சந்தன மரத்தை வெட்டி அடி பாகத்தை எடுத்து வந்தது. தெரிய வந்தது. அதில் ஒருவன் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டான். சிக்கியவனை விசாரித்த போது, சேலம் மாவட்டம், ஆத்தூர் கோட்டை பகுதியை சேர்ந்த மோகன் மகன் கோவிந்தராஜ் (32) என்பதும், தப்பி ஓடியவன் ஆத்தூர் அருகே உள்ள முட்டல்மலையை சேர்ந்த பழனி என்பதும் தெரிய வந்தது.
மேலும், சந்தன கட்டை, பைக்கை பறிமுதல் செய்த போலீசார் மேலும், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தன கட்டை எதற்காக வெட்டி கடத்தினார்கள்? எங்கே விற்பனை செய்வார்கள் எனவும், போலீசார் விசாரணை நடத்துகின்றனர். பல நீண்ட வருடங்களுக்கு பிறகு, சந்தன கட்டை கடத்தல் சம்பவம் தற்போது தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.