One of the wounded cattle killed at Jallikattu near Perambalur.
பெரம்பலூர் மாவட்டம், அன்னமங்கலம் கிராமத்தில் கடந்த மே.20 ந் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 12 பேர் பார்வையாளர்கள் 12 பேர் என மொத்தம் 24 பேர் காயமடைந்தனர்.
இதில் தொண்டமாந்துறையை சேர்ந்த அந்தோணிசாமி (வயது50) என்பவர் மாடு முட்டி காயமடைந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அந்தோணிசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு அன்னம்மாள் என்ற ஒரு மனைவியும், சாந்தி, சவரியம்மாள், ஜோஷி என்ற மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
3 பேருக்கும் திருமணமாகிவிட்டது. அந்தோணிசாமி வெளிநாட்டில் (துபாய்) வேலை செய்து வந்தார். தற்சமயம் விடுமுறையில் ஊருக்கு வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.