A man who was cutting grass for a cow near Perambalur was electrocuted and killed!
பெரம்பலூர் மாவட்டம், செங்குணம் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் கண்ணன் (வயது 62) இன்று காலை சுமார் 9:45 மணியளவில் மாட்டிற்கு புல் அறுக்க ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான வயலுக்கு சென்றார்.
கிணற்றின் அருகே புல் அறுத்து கொண்டிருந்த போது, நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால் மின்கம்பத்தில் செல்லும் கம்பிகள் அறுந்து கீழே கிடந்துள்ளது. இதை அறியாத கண்ணன் மீது கம்பி வயர்கள் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதை அவ்வழியாக சென்றவர்கள் ஊருக்குள் தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் மருவத்தூர் போலீசார், கண்ணனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.