Onion storage shed at 50 percent subsidy; Perambalur Collector Information!  50 சதவீத மானியத்தில் வெங்காய சேமிப்பு கொட்டகை; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்ட செயலாக்கத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2023-24 ஆம் நிதியாண்டில் வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகள் அறுவடைக்கு பின்பு சேமித்து வைப்பதற்காக 25.00 மெ.டன் (1 யூனிட்) கொண்ட குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு 50 சதவீத மானியத்தில் பின்னேற்பு மானியமாக ரூ.87,500/-வழங்க மட்டும் நிதி இலக்கு பெறப்பட்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தின் கீழ் இதுவரை பயன்பெறாத விவசாயிகள் பயன்பெற விருப்பம் இருப்பின் தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நிலவரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் அளவு புகைப்படம்-2, வங்கிகணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் 20.10.2023-க்குள் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!