Only 50 per cent seats or 200 persons are allowed to participate in the hall events: Perambalur Collector Information

பெரம்பலூரில் கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் திருமண மண்டப உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், தெரிவித்துள்ளதாவது:

தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுத்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நோய் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழக மக்களின் நலன் கருதியும், பொருளாதார நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் அடிப்படையில், திருமண மண்டபங்களில் நடத்தப்படும் நிகழச்சிகளுக்கு ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி உள் அரங்கங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

திருமண மண்டப உரிமையாளர்கள் நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்து முன் கூட்டியே மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து, அனுமதி பெற வேண்டும். நிகழ்ச்சிகளின் போது மருத்துவ குழுவினரை வைத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்களுக்கு முறையாக உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். இருக்கைகளை சமூக இடைவெளியினை பின்பற்றும் வகையில் அமைத்திட வேண்டும். முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதிபடுத்திட வேண்டும். பொதுமக்கள் அதிகமாக தொடும் அல்லது பயன்படுத்தும் இடங்களை கிருமிநாசினி கொண்டு சீரான கால இடைவெளியில் சுத்தப்படுத்திட வேண்டும். நெருக்கமாக கூடுவதை தவிர்த்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, பொதுமக்களின் நலன் கருதி அரசு அறிவித்துள்ள தளர்வுகளின் போது, அரசு நிர்ணயித்துள்ள நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றுவதன் மூலம் கெரோனா நோய் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படுவதோடு, நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெற வழி ஏற்படும். அரசு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் டி.ஆர்ஓ., சி.ராஜேந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.கீதாராணி, திருமண மண்டப உரிமையாளர்கள் உட்பட அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!