Only one medical shopkeeper was arrested while medical shopkeepers were treating people in Perambalur district!

பெரம்பலூர் அருகே மெடிக்கல் ஷாப் ஒன்றில் சட்ட விரோதமாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது: சுகாதாரத்துறையினரின் புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் நடவடிக்கை

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரை சேர்ந்த கருப்பையா மகன் பாபு (45). (டி பாஃர்ம்) டிப்ளமோ இன் பார்மசி படித்துள்ள இவர் பாடாலூர் பெருமாள் கோவில் தெருவில் கடந்த சில வருடங்களாக மெடிக்கல் கடை நடத்தி வருகிறார்.

அந்த மெடிக்கல் ஷாப்பில் சட்ட விரோதமாக பொது மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், இன்று சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமையிலான சுகாதாரத் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அதிகாரிகளின் ஆய்வில், சட்ட விரோதமாக பாபு மருத்துவம் பார்ப்பது கண்டறியப்பட்டு, புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான பாடாலூர் போலீசார் பாபுவை கைது செய்து பாடாலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் மிகவும் பரபரப்பாக காணப்படும் பாடலூர் கிராமத்தில், பொதுமக்களுக்கு சட்ட விரோதமாக மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் எசனை, கோனேரிப்பாளையம், வேப்பந்தட்டை, வி.களத்தூர், அரும்பாவூர், பூலாம்பாடி, உடும்பியம், கை.களத்தூர், குன்னம், வேப்பூர், லப்பைக்குடிக்காடு, 36எறையூர், வாலிகண்டபுரம் உள்ளிட்ட ஊர்களில் எம்.எம்.பி.பிஎஸ். படித்த மருத்துவர்களின் பெயர்களை விசிட்டிங் மருத்துவர்களாக போட்டுக் கொண்டு அவர்களுக்கு மாதாமாதம் ஒரு தொகையை செலுத்திக் கொண்டு, 10 வது, படித்தவர்கள், லேப் அசிடெண்டுகள் வைத்தியம் பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு, அந்த மருத்துவர்களும், தொலைபேசியில் மருந்து மாத்திரைகளையும் தெரிவிக்கின்றனர் என்பதுடன், படித்த மருத்துவர்களை விட படிக்காத போலி டாக்டர்கள் கிராமங்களில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்ககது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!