Opened one! Forgot to open the other one!! Minister Sivasankar!!

பெரம்பலூர் மாவட்டம், தனது குன்னம் தொகுதியில் இன்று அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் கற்பகம் தலைமையில், ரூ. 5.11 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கியும் வைத்தார்.

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று குன்னம் ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.21.16 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, குன்னம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.1.93 லட்சம் மதிப்பீட்டில் ஆசிரியர்களுக்கான கழிவறை அமைக்கும் பணி, குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஆசிரியர்களுக்கான கழிவறை அமைக்கும் பணி, குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் நிறுத்தும் கொட்டகை அமைக்கும் பணி,

அந்தூர் ஊராட்சியல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.9.15 லட்சம் மதிப்பீட்டில் அந்தூர் கிளியூர் கசிவுநீர் குட்டையில் ஆழப்படுத்துதல் மற்றும் படித்துரை அமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.08.03 லட்சம் மதிப்பீட்டில் அந்தூர் பகுதியில் தெற்கு தெருவில் சிமெண்ட் சாலை மற்றும் வடிகால் வாய்கால் அமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.05.90 லட்சம் மதிப்பீட்டில் அந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கழிவறை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒதியம் ஊராட்சியில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.24.11 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.9.40 லட்சம் மதிப்பீட்டில் ஒதியம் குப்புடையான் ஏரி ஆழப்படுத்துதல் மற்றும் படித்துரை அமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் ஒதியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சைக்கிள் நிறுத்தும் கொட்டகை அமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.9.85 லட்சம் மதிப்பீட்டில் ஒதியம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் எரியூட்டும் தகன மேடை, கைபம்பு, சிமெண்ட் சாலை, சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.92 லட்சம் மதிப்பீட்டில் லட்சுமிபுரம் மேற்கு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.4.62 லட்சம் மதிப்பீட்டில் லட்சுமிபுரம் கூட்டு குடிநீர் டேங்க் உள்ள தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி,

ஆண்டிக்குரும்பலூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.03.61 லட்சம் மதிப்பீட்டில் வைத்தியநாதபுரம் வடக்கு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.13.77 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டிக்குரும்பலூர் தெற்கு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.9.77 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டிக்குரும்பலூர் பி.சி தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.23.49 லட்சம் வைத்தியநாதபுரம் தோப்பு பாதை முதல் ஓரடுக்கு மெட்டல் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சிவசங்கர்.

மேலும் அசூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அசூர் நியாயவிலைக் கட்டடம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.5.00 மதிப்பீட்டில் அசூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள சமையலறை கூடம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் அசூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் போன்றவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

அசூர் பள்ளியில், கழிப்பறை திறந்து வைத்த அமைச்சர் சிவசங்கர், அங்கு ரிப்பன் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு ஆயத்தமாக (தயாராக) இருந்த மற்றொரு கழிப்பறையான மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய கழிப்பறையை திறக்காமல் சென்றார். இதனால், அதற்கு யார் தனியாக யாராவது வருவகிறார்களா என அங்கிருந்தவர்கள் யோசித்து கொண்டிருந்தனர். .

ஊரக வளர்ச்சி, கூட்டுறவு மற்றும், வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக் கவுன்சிலர் கருணாநிதி, உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!