Opportunity for ex-servicemen to engage in election security: Perambalur Constituency Election Officer Information!

Model
வரும் பாராளுமன்ற தேர்தல் – 2024 -ல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை அதிக அளவில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த தேர்தல் பாதுகாப்பு பணிபுரிய விருப்பமுள்ள 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல் திறனுள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் (JCOs) / முன்னாள் படைவீரர்கள்(ORs) தங்களது அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் மற்றும் வாக்காளர் அட்டையுடன் ‘உதவி இயக்குநர் (மு.கூ.பொ), முன்னாள் படைவீரர் நல அலுவலகம், அறை எண் 17, பல்துறை வளாகம் (பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகம்) அரியலூர் 621 704 என்ற அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு 04329 – 221 011 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என பெரம்பலூர் தொகுதி தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.