Opportunity for those who fail to renew in the employment office: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

2014 முதல் 2019 வரை (01.01.2014 முதல் 31.12.2019 வரை) ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரர்கள் பணி வாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் அரசாணை(டி) எண் 548 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (ட்டி2) துறை, நாள் 02.12.2021ன் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது.

அரசாணையில் தெரிவித்தவாறு இச்சலுகையைப் பெறுவிரும்பும் பதிவுதாரர்கள் இவ்வரசாணை வெளியிடப்பட்ட நாளான 02.12.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 01.03.2022க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினைப் புதுப்பிக்க இயலாத பதிவுதாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்து கொள்ளலாம்.

இணையம் மூலமாக புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https:/tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி 01.03.2022 வரை பதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் 01.03.2022க்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!