Opposition to the opening of the wine shop in Uppodai area: Public road blockade || உப்போடை பகுதியில் மதுக்கடை திறந்ததற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்
எளம்பலூர் உப்போடை பகுதியில் மதுக்கடை திறந்தற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் உப்போடை பகுதியில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் புதிய மதுக்கடை இன்று திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் இன்று சுமார் 6 மணியளவில் பெரம்பலூர் – எளம்பலூர் சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய், மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுப்பதாக அளித்த உறுதியின் பேரில் கலைந்து சென்றனர்.
அதனால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.