OPS team is empty with a cage in Perambalur: The decision was made in a secret meeting of administrators!
பெரம்பலூர் ஓபிஎஸ் அணியை சேர்ந்த அனைத்து ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட அணி செயலாளர்கள், நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியிலிருந்து ஒருமனதாக வெளியேற முடிவு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெரம்பலூர் 4 ரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் குழந்தைவேல் தலைமையில் ரகசியமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் ஓபிஎஸ் அணியிலிருந்து வெளியேறி பொதுச்செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தலைமையில் இனி மீண்டும் தாய் கழகத்தில் இணைந்து பணியாற்ற போவதாக ஒரு மனதாக அனைவரும் சேர்ந்து தீர்மானத்தை இயற்றினர்.
மேலும் ஓபிஎஸ் அணியை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரனையும் நேரில் சந்தித்து அழைத்து கொண்டு, தலைமையில் அதிமுகவில் இணை இருப்பதாக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் பெரம்பலூரில் ஓபிஎஸ் அணி கூடாரம் மிக விரைவில் காலியாகிறது.