Organizer nutrition for school nutrition centers, edible interview for assistant vaccants

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் 21 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 19 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்வதற்கான நேர்முகத் தேர்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள 6 காலிப்பணியடங்களுக்கு 266 நபர்களும், ஆலத்தூர் ஒன்றியத்தில் ஒன்றியத்தில் உள்ள 6 காலிப்பணியடங்களுக்கு 147 நபர்களும், வேப்பூர் ஒன்றியத்தில் ஒன்றியத்தில் உள்ள 3 காலிப்பணியடங்களுக்கு 108 நபர்களும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள 6 காலிப்பணியடங்களுக்கு 241 நபர்களும் என மொத்தம் 762 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

சத்துணவு மைய சமையல் உதவியாளர் பதவிக்கு பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள 4 காலிப்பணியடங்களுக்கு 106 நபர்களும், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள 5 காலிப்பணியடங்களுக்கு 56 நபர்களும், வேப்பூர; ஒன்றியத்தில் உள்ள 10 காலிப்பணியடங்களுக்கு 83 நபர்களும் என மொத்தம் 245 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பித்த அனைத்து நபர்களுக்கும் வட்டாரம் வாரியாக நேர்முகத் தேர்வு இன்று நடைபெற்றது. இந்த நேர்முகத் தேர்வில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ந.கதிரேசனும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதரும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) துரையும் மேற்பார்வை அலுவலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், ஊராட்சி ஒன்றிய அளவில் கூர்ந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டு இன்று வருகைபுரிந்த அனைவரிடமும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வுபெறும் நபர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும், என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!