Organizers nutrition, cooking assistant for workplaces Nomination Selection Order

பெரம்பலூர் மாவட்டத்தில் சத்துணவு பணிக்காக தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிசாமி வழங்கினார்

பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் 21 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 19 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்வதற்கான நேர்முகத் தேர்வு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (16.2.2017) நடைபெற்றது.

இதில் சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள 6 காலிப்பணியிடங்களுக்கு 266 நபர்களும், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள 6 காலிப்பணியிடங்களுக்கு 147 நபர்களும், வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள 3 காலிப்பணியிடங்களுக்கு 108 நபர்களும், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் உள்ள 6 காலிப்பணியிடங்களுக்கு 241 நபர்களும் என மொத்தம் 762 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

சத்துணவு மைய சமையல் உதவியாளர் பதவிக்கு பெரம்பலூர் ஒன்றியத்தில் உள்ள 4 காலிப்பணியிடங்களுக்கு 106 நபர்களும், ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள 5 காலிப்பணியிடங்களுக்கு 56 நபர்களும், வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள 10 காலிப்பணியிடங்களுக்கு; 83 நபர்களும் என மொத்தம் 245 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு விண்ணப்பித்த 762 நபர்களில் 707 நபர்களும், சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த 245 நபர்களில் 225 நபர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டனர். தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு 21 நபர்கள் சத்துணவு அமைப்பாளர்களாகவும், 19 நபர்கள் சமையல் உதவியாளர்களாகவும் (17.02.2017) இன்று அந்தந்த சத்துணவு மையங்களில் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு அரசு அலுவலர்கள் பணி நியமன ஆணையை நேரடியாக வீடுகளுக்கு சென்று வழங்கினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!