Our School Our Pride – School Management Committee Meeting: There is not enough funding in the localities! There is no interest for the education of the poor People !!

தமிழக அரசின் உத்தரவுப்படி அனைத்து மாவட்டத்திலும், இன்று நம் பள்ளி நம் பெருமை – பள்ளி மேலாண்மைக்குழு பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் அனைத்து பள்ளிகளிலும், இன்று நடத்தப்பட்டது. இது இன்று பெரம்பலூர் மாவட்டத்திலும், நடந்தது. இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்றாலும், பல குறைகளை கொண்டுள்ளது.

பள்ளி மேலாண்மைக்குழு என்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் போன்ற 20 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு தேர்வு செய்யப்பட்டது. அப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்களில் ஒருவர் குழுவின் தலைவராக, இருப்பார். வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள் இதில் அடங்குவர். 2 ஆண்டிற்கு ஒரு முறை இக்குழு மாற்றி அமைக்கப்படும். பள்ளி இருக்கும் ஊர் மக்களின் பங்களிப்போடு பள்ளியின் தேவைகளை நிறைவேற்றி குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதை இக்குழுவின் உறுப்பினர்கள் உறுதி செய்ய இக்குழு அமைக்ககப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் பெரும்பாலான கிராமங்களில் பள்ளிகளுக்கு போதுமாக கட்டமைப்பு வசதி இல்லை. அரசு பள்ளியில், பணிபுரியும் கடை நிலை ஊழியர்களுக்கு, ஊதியம் வழங்குவது யார் வழங்குவது என்பது கேள்விக்குறியாக உள்ளது. அரசு ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை. இதற்கு ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகங்களிடம் போதுமான நிதி ஆதாராம் இல்லை, என பல ஊராட்சித் தலைவர்கள் தெரிவத்து விட்டனர். தன்னாலர்கள், பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆங்காங்கே செய்யும் நிதியுதவிகளே பள்ளியை நடத்தி உதவி வருவது தெரியவருகிறது.

மேலும், அரசு வழங்கும், சீருடை, செருப்புகள், புத்தக பைகள், தரமற்றவையாக இருப்பதோடு, பொருந்தாதாக உள்ளது. கொரோனாவிற்கு பிறகு ஊராட்சிகளுக்கு போதுமான வருவாய் இல்லை என்பதாலும், ஊராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவே பெரும்பாடு படுவதாகவும், பலர் ஊராட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்தனர்.

தற்போது அரசாங்கமும், தனியார் பள்ளிகள் போல் வசூல் செய்ய தொடங்கிவிட்டதா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு குவாரிகள், அரசின் திட்டங்களை செயல்படுத்த வருமானத்திற்கு மீறி, கமிசன் வாங்கி கல்லா காட்டும் ஆர்வம் அரசு பள்ளி கல்வி குறித்த அக்கறை ஏதும் இல்லை என தெரிகிறது.

மேலும், மக்கள் வரிப்பணத்தில் ராயல் லைப் (ராஜ வாழ்க்கை) வாழும் அதிகாரிகள், அரசியல்வாதி வர்க்கங்களின் குழந்தைகள் தனியாரில் ஓசியில் கல்வி பயில்வதால், அவர்களுக்கு ஓட்டு போடும் ஏழை எளிய மக்களை பற்றி கவலை கொள்ளவில்லை என தெரிய வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளை தரம் உயர்த்த, அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அடுத்த வெற்றி பெறுவதற்காவது அக்கறை எடுத்து கொள்ளவேண்டும் என்பதே அரசு பள்ளி பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பள்ளிகளுக்கு முன்னாள் கலெக்டர் தரேஸ் அஹமது, நந்தக்குமார் போன்ற நல்ல கலெக்டர்கள் வருவார்களா என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.

வருமானத்திற்கு மீறி சொத்துக்களை குவித்த அமைச்சர்கள், கலெக்டர்கள், சப்-கலெக்டர்கள், தாசில்தார்கள், வீடுகளில் ரெய்டு நடக்கிறது. ஆனால், அரசு வருமானம் இல்லாதவர்களிடம் கையேந்துகிறது. மக்கள் செலுத்தும் வரிப்பணம் என்னதான் ஆகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!