Out of a total of 126 nominations in Perambalur Municipality, 1 petition was dismissed; Petitions of 125 people accepted!
பெரம்பலூர் நகராட்சியின் 6வது வார்டு வேட்பளாராக மனு தாக்கல் செய்த விமல்குமார் மனு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டது, மற்ற 125 பேரின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. லப்பைகுடிகாடு பேரூராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 97 வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குரும்பலூர் பேரூராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 54 வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது
பூலாம்பாடி பேரூராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 36 வேட்புமனுக்களும், ஏற்றுக் கொள்ளப்பட்டது. அரும்பாவூர் பேரூராட்சியில் தாக்கல் செய்த 48 வேட்புமனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.