Outdated Firearms at Perambalur Collector’s office: Question mark security!

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்பான்கள் காலாவதியாகியும், பல்வேறு பொருட்கள் பராமரிப்பின்றி கிடப்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 3 தளங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட அலுவலங்கள் துறைவாரியாக இயங்கி வருகின்றனர். சுமார் 350 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருவதுடன், வேலைநாட்களில் 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். மேலும், முக்கிய நிகழ்ச்சிகளின் போது ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இடமாக உள்ளது.

அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்களில் த

தீயணைப்பான்கள் கட்டாயம் வைக்கப்பட்டிருக்க வேண்டும். இவை ஏ, பி, சி. சிஓ2 என நான்கு வகைப்படும். ஏ – ஆனாது திரவ தீயணைப்பான் . மரம் போன்ற எரிந்து சாம்பலாக கூடியவற்றை அணைக்கும். நுரை தீயணைப்பானான பி பெட்ரோல், ஆயில் வகை தீயை அணைக்கும். டிரை கெமிக்கல் பவுடர் வகை தீயணைப்பானான – சி கியாஸ் சிலிண்டர், இரும்பு ஆலைகளில் ஏற்படும் தீயை அணைக்கும். சி.ஓ2., என்பது மின்கசிவால் ஏற்படும் தீயை அணைக்கும். கலெக்டர் அலுவலகத்தில் பெரும்பாலும் ‘சி’ வகை தீயணைப்பான்கள் உள்ளன. ஏ,பி,சி , தீயணைப்பான்களை ஆண்டிற்கு ஒரு முறை ‘ரீபில்’ செய்ய வேண்டும். கலெக்டர் அலுவலகத்தில் 40 க்கு மேற்பட்ட தீயணைப்பான்கள் உள்ளன.

தீயணைப்பான்கள் காலாவதி ஆகிவிட்டன. ஆண்டுக்கு ஒரு முறை ரீபில் செய்யப்படும், ஆனால், சுமார் ஒரு மாதம் கடந்தும் இதுவரை ‘ரீபில்’ செய்யப்படாத தீயணைப்பான்கள் தீயை அணைக்காது. அதன் வீரியத்தன்மையை இழந்துவிடும். ஏற்கனவே, கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு சுகாதார குறைபாடுகள், கழிப்பறை துர்நாற்றம் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு உபகரணங்களும் வெறும் காட்சி பொருளாக இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அசம்பாவிதங்கள் நடந்தால் தடுக்கும் வகையில் தீயணைப்பான்களை ரீபில் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!