Outer police station in Agaramseekoor: Perambalur police SP Mani opened!

பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூரில் புறக் காவல் நிலையத்தை எஸ்.பி மணி திறந்து வைத்தார்.

ஊராட்சி மன்ற அலுவலகம் புதியதாக கட்டப்பட்டதால் காலியாக இருந்த பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் புறக்காவல் நிலையமாக மாற்றப்பட்டது.

நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி ஆரோக்கிய பிரசாத், மங்களமேடு டிஎஸ்பி (பொ) வளவன், தங்கமணி, காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி, உதவி காவல் ஆய்வாளர் செந்தமிழ் செல்வி. சிறப்புக் காவல் ஆய்வாளர் மணிவேல், அகரம்சிகூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ்ச் செல்வன், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், ஒகளூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போலீஸ் எஸ்.பி.யிடம் பொதுமக்கள் அப்பகுதி நடக்கும் மணல் கடத்தல் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனையை தடுக்கக் கோரியும், டாஸ்மாக் இடத்தை மாற்றம் செய்து தரக் கோரியும் வேண்டுகோள் விடுத்தனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!