Overloaded cane tractors: Passengers who survived an accident by opening the car’s airbag!
பெரம்பலூர் மாவட்டம், உடும்பியம் கிராமத்தில் இருக்கும் தனியர் சர்க்கரை ஆலைக்கு, கரும்புகள் ஏற்றி செல்லும், டிராக்டர்கள் அளவிற்கு அதிகமாக கரும்புகளை ஏற்றி கொண்டு சாலை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, பிற வாகனங்கள் செல்ல வழி கொடுக்கமால் தினமும் செல்கின்றனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் மாமூலாக கண்டுகொள்வதில்லை. அதனால் பெரம்பலூர் – ஆத்தூர் செல்லும் சாலையில் வாகனங்கள் உரிய நேரத்திற்கு செல்லமுடியாமல் கடும் அவதிப்படுகின்றனர். இதே போன்று நேற்றிரவு அளவிற்கு அதிகமாக கரும்புகளை ஏற்றிக் கொண்டு சென்ற டிராக்டர் சாலையின் இடது புறத்தில் இருக்கும் புளியமரத்தில் மோதல் இருக்க செல்லாமல் வலது புற சாலையை ஆக்கிரத்து திடீரென டிராக் மாறி சென்றதால், கெங்கவள்ளியில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த காரும்,டிராக்டரும் மோதிக் கொண்டது, இதில், மோதப்பட்ட கார் சுமார் 50 அடி தள்ளி விழுந்தது. இதில் அதிர்ஷ்ட்டவசமாக காரின் ஏர் பேக் ஓபன் ஆனதால் காரில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். எனவே, போக்குவரத்து போலீசார் அளவிற்கு அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை அபராதம் விதிப்பதோடு, கூடுதலாக உள்ள பாரத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.