Paavai Festival -2019 in Namakkal, on behalf of the Department of Hindu Religious and Charitable

நாமக்கல்லில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாவை விழா-2019 நடைபெற்றது.
ஆண்டு தோறும் மார்கழி மாதம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாவை விழா நாமக்கல்லில் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு நாமக்கல் முல்லை மஹாலில் பாவை விழா-2019 நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருப்பாவை மற்றும் திருவம்பாவை கட்டுரை ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது.
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை திருப்பாவை 6 முதல் 10 பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டியும், திருமால் பெருமை கட்டுரை போட்டியும் நடைபெற்றது. திருவம்பாவையில் 11 முதல் 15 பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டியும், மாணிக்கவாசகர் போற்றிய சிவபெருமான் கட்டுரை போட்டியும் நடைபெற்றது.
6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை திருப்பாவை 11 முதல் 20 பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டியும், ஆண்டாள் காட்டும் வாழ்வியல் நெறி கட்டுரை போட்டியும்,
திருவம்பாவையில் 11 முதல் 20 பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டியும், மாணிக்கவாசகர் வாழ்டுவும் வாக்கும் கட்டுரை போட்டியும் நடைபெற்றது.
9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை திருப்பாவை 1 முதல் 20 பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டியும், திருப்பாவை உணர்த்தும் பெண்கள் பெருமை கட்டுரை போட்டியும், திருவம்பாவையில் 1 முதல் 20 பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டியும், நாடும் வீடும் நலம்பெற செய்யும் மார்கழி வழிபாடு கட்டுரை போட்டியும் நடைபெற்றது.
இதில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற 3 பேருக்கு முதல் பரிசாக தலா ரூ.3 ஆயிரமும், 2ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக தலா ரூ ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர்கள் ரமேஷ், கருணாநிதி ஆகியோர் செய்திருந்தனர். இதில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.