Collector inaugurates new direct paddy procurement station at Arumbavoor, Perambalur District!

பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அரும்பாவூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், அரும்பாவூரில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, கலெக்டர் கற்பகம், எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில் இன்று திறந்து வைத்தார்.

இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல்லினை விற்பனை செய்து பயன்பெறலாம். அரும்பாவூர் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன் பெறலாம். மேலும் கடந்த ஆண்டு கே.எம்.எஸ் 2021 – 2022- ஆம் பருவத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் 18 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அதன் மூலம் 28,865 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இதுவரையில் திறக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 26,000 மெ.டன் அளவிற்கு நெல் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய வேளாண்மைத் துறையின் மூலம் தெரிவிக்கப்பட்ட விபரங்களின்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,060ரூபாயும், அதற்கான ஊக்கத்தொகை ரூபாய் 100 என ஆக மொத்தம் ரூபாய் 2160 எனவும், பொது ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,040 ரூபாயும், அதற்கான ஊக்கத்தொகை ரூபாய் 75 என ஆக மொத்தம் ரூபாய் 2,115 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதலுக்காக வரும் விவசாயிகள் தங்களின், விவசாயின் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், பட்டா / சிட்டா அடங்கல் நகல், கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழ் ஆகியவற்றில் இரண்டு பிரதிகளை நேரடியாகவோ வழங்கியோ அல்லது ஆன்லைனிலோ பதிவு செய்து பயன்பெறலாம்.

மாவட்ட கவுன்சிலர் தழுதாழை .சி.பாஸ்கர், வேப்பந்தட்டை யூனியன் சேர்மன் க.ராமலிங்கம், அரும்பாவூர் பேரூராட்சி தலைவர் வள்ளியம்மை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக துணை மண்டல மேலாளர் பிரேமலதா, அகோரமூர்த்தி, துணை மேலாளர் (த.க) பொறுப்பு மற்றும் சையது முஸ்தபா, கொள்முதல் அலுவலர் / கண்காணிப்பாளர், விவசாய பெருமக்கள் மற்றும் ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!