Panchayat Council Meetings in Perambalur District Explaining the Distresses of Govt.! DMK announcement
பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கை:
மக்களிடம் செல்வோம்- மக்களிடம் சொல்வோம்- மக்களின் மனங்களை வெல்வோம் ” என்ற மூன்று மகத்தான முழக்கங்களை முன் வைத்துத்தான் நம்முடைய செயல்பாடுகள் இனி அமைய வேண்டும் என்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 24-12-18 அன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்- நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தபடி
வேப்பூர் தெற்கு ஒன்றியம்- 09-01-19 மாலை 4 மணி ஒதியம், மாலை 6 மணி குன்னம், தலைமை-சி.ராஜேந்திரன், ஒன்றிய பொறுப்பாளர்.
வரவேற்புரை-ஊராட்சி செயலாளர்கள் ஆ.தங்கராசு, மதியழகன், சிறப்புரை- குன்னம் சி.இராஜேந்திரன். மாவட்ட கழக செயலாளர்,
வேப்பூர் வடக்கு ஒன்றியம்- 10-01-19 மாலை 4 மணி கீழப்பெரம்பலூர், மாலை 6 மணி வசிஷ்டபுரம், தலைமை- தி.மதியழகன், ஒன்றிய செயலாளர்,
வரவேற்புரை- ஊராட்சி செயலாளர்கள் டி.பழனிவேல், பி.ஆசைத்தம்பி, சிறப்புரை-குன்னம் சி. இராஜேந்திரன், மாவட்ட கழகச் செயலாளர்.
ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம்- 11-01-19 மாலை 6 மணி கொளத்தூர், மாலை 7 மணி கொளக்காநத்தம், தலைமை- என்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்,
வரவேற்புரை-ஊராட்சி செயலாளர்கள் சி.துரைமாணிக்கம், ந.ராகவன், சிறப்புரை-குன்னம் சி.இராஜேந்திரன், மாவட்ட கழகச் செயலாளர்.
ஆலத்தூர் மேற்கு ஒன்றியம்- 09-01-19 மாலை 6 மணிய செட்டிக்குளம், ” மாலை 7 மணி மாவிலங்கை,
தலைமை- சோமு.மதியழகன், வரவேற்புரை- ஊராட்சி செயலாளர்கள் வெ.சந்திரசேகர், சுப்ரமணியன்,
சிறப்புரை-வேளச்சேரி பி.மணிமாறன்.
——
வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம்- 10-01-19 மாலை 6 மணி மேட்டுப்பாளையம், மாலை 7 மணி பிரம்மதேசம், தலைமை- வீ.ஜெகதீசன், வரவேற்புரை – ஊராட்சி செயலாளர்கள் ஜெயக்குமார், பச்சமுத்து. சிறப்புரை- வேளச்சேரி பி. மணிமாறன்,
பெரம்பலூர் ஒன்றியத்தில் நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டங்கள்!
பெரம்பலூர் ஒன்றியம்-11-01-19- மாலை 4 மணி வேலூர், மாலை 6 மணி சத்திரமனை. தலைமை- எஸ்.அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள்
பிரபு, செல்லமுத்து. வரவேற்புரை-ஊராட்சி செயலாளர்கள் சிறப்புரை-கே.பி.பி.சாமி,முன்னாள் அமைச்சர்.
மேற்கண்ட ஊராட்சி சபைக் கூட்டங்களை ஒன்றிய கழகச் செயலாளர்கள், ஊராட்சி கழகச் செயலாளர்கள் நடத்த ஏற்பாடுகள் செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டுமாய் குன்னம் சி.இராஜேந்திரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.