Panchayat secretary, approved the issue Official Gazette notifications demanding requests of Tamil Nadu Rural Development Officers Association held a hunger strike today.

ஊராட்சி செயலாளர்களுக்கு, ஏற்கப்பட்ட கோரிக்கைகளை அரசாணைகளாக வெளியிடக் கோரி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

perambalur-panchayt-secreties

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக, பூங்கா வாயில் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர், ஊராட்சி செயலாளர்களுக்கு, ஏற்கப்பட்ட கோரிக்கைகளை அரசாணைகளாக வெளியிடக் கோரி மாநிலந் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

அச்சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் இ.மரியதாஸ் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், அரசு ஏற்றக் கொண்ட கோரிக்கைள் :

ஊதியம் உயர்த்தி வழங்கவும், தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கவும், கூடுதல் பொறுப்புப் படி, ஊராட்சி செயலார்களின் பணிக்காலத்தில் 50 சதவீத பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்கு சேர்த்து கொள்ள வேண்டும், ஓய்வூதியம் ரூ.1500 மற்றும் ஒட்டு மொத்த தொகை ரூ. 60 ஆயிரம் வழங்கிடவும், மாதந்தோறும் தங்கு தடையின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

மாவட்டத் துணைத் தலைவர்கள் மு.இமயவரம்பன், எஸ்.ஆர்.மோகன், மாவட்ட இணைச் செயலாளர்கள் சேவு, பெ.தேவேந்திரன் லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைத் தலைவர் கே.கவுதமன் வரவேற்றார்.

மாநில செயலாளர் அ. சவுந்திரபாண்டியன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் சா. இளங்கோவன், மாவட்டத் துணைத் தலைவர் பி.தயாளன் உள்ளிட்ட பலர் உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பெரம்பலூர் மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார் இன்று மாலை உண்ணாவிரதத்தை முடித்து வைத்து உரை நிகழ்த்துகிறார். மாவட்ட பொருளாளர் இரா.அறிவழகன் நன்றி தெரிவிக்கிறார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!