Paper bag making, mushroom cultivation free training for rural youth of Perambalur district!
பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில், காகித பைகள் தயாரிப்பு மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சிகள் வரும். 4ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்கு வயது 18க்கு மேல் மற்றும் 45க்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்தவராக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக. சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை 10 நாட்கள் நடக்கும் இப்பயிற்சியின் போது, காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சிமுடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப் பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும், கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விருப்பம் உள்ளவர்கள் பெரம்பலூர் சங்கு பேருந்து நிறுத்தத்தில் உள்ள ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் தங்களது பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றோடு விண்ணப்பிக்கவும். குடும்ப அட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோக்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து பிப்ரவரி 4ம் ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.