Parents of students coming to school every day, to ensure that: the district civil service employee

school kalaimalar.comநடைபெற்று முடிந்த காலாண்டுத் தேர்வில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறித்து ஆய்வு செய்யும் விதமாக பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் மாவட்ட ஆட்சிப் பணியாளர் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி மாணவ-மாணவிகளுக்கு கற்கும் திறனில் உள்ள குறைபாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

அதன் தொடர்ச்சியாக காலாண்டுத் தேர்வில் பன்னிரண்டாம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ -மாணவிகள் அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்களுடானான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி தவறியதற்கான காரணங்கள் குறித்து அவர்களின் பெற்றோர்களிடத்திலும், கல்வி கற்பதிலும், படிப்பதிலும், படித்ததை தேர்வுகளில் வெளிப்படுத்துவதிலும் உள்ள இடர்பாடுகள் குறித்து மாணவ-மாணவிகளிடத்திலும் விரிவாக கேட்டறிந்த பின்னர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் பேசிதாவது:

அனைத்துப்பள்ளிகளிலும் தினந்தோறும் பாடவாரியாக குறுந் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. கற்கும் திறன் குறைந்த மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. தினந்தோறும் நடத்தப்படுத் தேர்வுத்தாள்கள் அவ்வப்போது ஆசிரியர்களால் திருத்தப்பட்டு பெற்றோர்களிடம் கையொப்பம் பெற்று வரும்படி மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.

இந்நிலையில் மாணவ-மாணவிகள் அனைத்துப்பாடங்களிலும் தேர்ச்சியை தவறவிடுவது என்பது ஏற்றுக் கொள்ள இயலாததாகும். மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் பெற்றோர்களின் பங்கு இன்றியமையாததாகும்.

தங்களது பிள்ளைகள் தினந்தோறும் பள்ளிக்குச் செல்கிறார்களா என்று பெற்றோர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தங்கள் பிள்ளைகள் பயிலும் பள்ளிக்குச்சென்று தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் பிள்ளைகள் ஒழுங்காக பள்ளிக்கு வருகிறார்களா பாடங்களை கவனிக்கிறார்களா என்று கேட்டறிய வேண்டும்.

மேலும், தினந்தோறும் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்கிறார்களா என்றும் அதில் அவர்கள் பெறும் மதிப்பெண்களில் ஏதேனும் முன்னேற்றம் இருக்கிறதா என்றும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

கல்வியின் முக்கியத்துவத்தை பிள்ளைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் விளக்க வேண்டும். மாதந்தோறும் நடத்தப்படும் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் அனைத்துப் பெற்றோர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.

பள்ளிக்குத்தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மாணவ-மாணவிகளின் கல்வி முன்னேற்றத்திற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும். பள்ளிக்கு அடிப்படை தேவைகள் இருப்பின் அவற்றை தீர்மானமாக நிறைவேற்றி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கப்படும் கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிக்கு வராதா மாணவர்கள் குறித்து சம்மந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்து, மாணவன் தொடர்ந்து பள்ளிக்கு வரத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நடைபெறவுள்ள அரையாண்டுத் தேர்வில் அனைத்து மாணவ-மாணவிகளும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெறத் தேவையான நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும், என பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர் வெங்கடாஜலபதி, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!